'கடுகு' படத்தை வெளியிடும் சூர்யா!

Friday, March 3, 2017

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கடுகு'. தரமான கதையம்சத்தோடு நகைச்சுவை கலந்து உருவாகி இருக்கும் இந்தப்படத்தை, 'ரஃப் நோட் புரொடக்‌ஷன்ஸ்' சார்பில் பாரத் சீனி தயாரித்துள்ளார். இயக்குநர் ராஜகுமாரன், பரத், பாரத் சீனி, ராதிகா பிரசித்தா மற்றும் சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

படத்தில் நடித்தது குறித்து ராஜகுமாரன் பேசியபோது, 

"இந்தக் கதையை விஜய் மில்டன் என்னிடம் கூற வரும்போது, எனக்கு உண்மையாகவே வியப்பாக இருந்தது. ஆனால் 'கடுகு' படத்தின் கதையைக் கேட்ட அடுத்த கணமே, நான் இந்தப் படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் தரமான கதையம்சம் என இரண்டும் மிக அழகாக ஒருங்கிணைந்து இருக்கும் இப்படத்தில், என்னோட பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. புலி வேஷம் போடும் ஒரு கலைஞனாக, கடுகு படத்தில் நடித்து இருக்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் கனகச்சிதமாக அமைய வேண்டும் என்பதற்காக, என்னை ஏறக்குறைய மூன்று மாதங்கள் தலைச்சிறந்த புலிவேஷக் கலைஞர்கள் சிலரிடம் பயிற்சி மேற்கொள்ள வைத்தார் இயக்குனர் விஜய் மில்டன். நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் என்னுடைய பாத்திரம் பேசப்படும்!" என்றார்.

கோடை விடுமுறையில் 'கடுகு' படத்தை வெளியிட படக்குழு  திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை '2 டி என்டர்டைன்மெண்ட்' சார்பில் நடிகர் சூர்யா பெற்றிருக்கிறார் என்பது படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles