‘யு’ சான்றிதழ் பெற்ற தப்பு தண்டா!

Tuesday, June 27, 2017

இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் ஸ்ரீகாந்தன். அவர் திரைக்கதை  எழுதி,  இயக்கியுள்ள  படம் 'தப்பு தண்டா'. இப்படத்தில் சத்யா நாயகனாகவும், ஸ்வேதா  நாயகியாகவும்  நடித்துள்ளனர். மேலும், ஜான் விஜய், 'விசாரணை ' புகழ் அஜய் கோஷும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 

“ஒரு படத்திற்கும் அதன் உருவாக்கத்திற்கும் நடிகர்கள் போடும் உழைப்பும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பும் முக்கியமானது. அதேபோல இயக்குனரின் தவம் அனைத்தும் முழுமை பெறுவது அப்படம் மக்களிடம் போய்ச் சேரும்போதுதான். அதை திறம்பட செய்பவர்கள் விநியோகஸ்தர்கள் மட்டுமே. அப்படியான வாய்ப்பு எங்களுக்கு  விநியோகஸ்தர் ஜோன்ஸ் அவர்கள் மூலம் கிடைத்துள்ளது.

தரமான ஜனரஞ்சக படங்களை மட்டுமே வாங்கி வெளியிடும் ' செஞ்சுரி இன்டெர்னஷனல்ஸ்' ன் ஜோன்ஸ் அவர்கள் எங்களது 'தப்பு தாண்டா' வை வெளியிடப்போவதில் எங்களுக்கு எல்லாம் பெருமை. இந்த படத்திற்கு சென்சார் குழு 'யூ ' சான்றிதழ் வழங்கியுள்ளதும் எங்களுக்கு பலம் சேர்த்துள்ளது” என்றார் ஸ்ரீகாந்தன்.  இப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles