மதுரை மைக்கேல் செம மாஸ்! ‘ட்ரிபிள் ஏ’ டாப் ஹிட்!

Friday, June 23, 2017

குளோபல் இன்போடெயன்மெண்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராய செவியர், எஸ்.மைக்«ல் ராயப்பன் தயாரித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கி உள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். படத்தில் சிலம்பரசன், ஸ்ரேயா, தமன்னா, மகத் ராகவேந்திரா, கோவை சரளா, விடிவி கணேஷ், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகி உள்ளது. 

சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியாகி உள்ள சிம்பு படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர். அவருடைய தந்தையான டி.ராஜேந்தரின் ஹேர் ஸ்டைலில் தோன்றும்போது தியேட்டரில் விசில் சப்தம் காதை பிளக்கிறது. அதேபோன்று தனது பாத்திரத்துக்காக சிம்பு மெனக்கெட்டிருப்பதும் ஒவ்வொரு பாத்திரத்திலும் தெரிகிறது. மதுரை மைக்கேல் செம மாஸ். சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்ட விருந்தாக அமைந்துள்ளது ட்ரிபிள் ஏ!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles