தமிழனாக இருந்தால் படத்தை நெட்டில் போடாதீங்க! நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள்!

Friday, June 23, 2017

திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் 'வனமகன்'. அடர்ந்த வனப்பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி, சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். இன்று வெளியாகி உள்ள இப்படம் குறித்து இயக்குநர் விஜய் பேசியபோது,

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. ‘வனமகன்’ அப்படி ஒரு படம். ஜெயம் ரவி இந்தப் படத்துக்காக அபாரமாக உழைத்திருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு ஒரு முழுமையான நடிகையாக சாயிஷா கிடைத்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த டான்ஸர். சில்வா மாஸ்டரின் சண்டை வடிவமைப்பு தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்கும். . வினியோகஸ்தர்கள் தயவு செய்து எல்லா படத்தையும் ஆதரிக்க வேண்டும். படத்தின் பட்ஜெட் தான் விலையை நிர்ணயிக்கிறது. நீங்கள் ஆதரவு கொடுத்தால் தான் ‘பாகுபலி’, ‘சங்கமித்ரா’ மாதிரியான படங்கள் வர முடியும். தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தப் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து படத்தின் நாயகன் ஜெயம் ரவி கூறும்போது, “கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்கு உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால் தான் இந்த படம் உருவாகியிருக்கிறது. என் படத்தில் நடிச்சா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. நிச்சயம் சாயிஷா அப்படி ஒரு இடத்தைப் பிடிப்பாங்க . விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம் தான் இது. சின்சியராக உழைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். தமிழனாக இருந்தால் படத்தை நெட்டுல போடாதீங்க!” என்று வேண்டுகோள் வைத்தார். நல்ல சினிமாக்களை ரசிகர்கள் கைவிடுவதில்லை. வனமகனும் அத்தகைய இடத்தை பிடிக்கும் என்று நம்புவோமாக!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles