அனைவரையும் கவரும் மரகத நாயணம்!

Friday, June 16, 2017

தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சத்துடன் வெளியாகும் படங்கள் தோற்பதில்லை. அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளது ‘மரகத நாணயம்’. ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில், ஆனந்த் ராஜ், டேனியல், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாகசம் மற்றும் காமெடி கலந்த படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவண். படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக டில்லி பாபு தயாரித்துள்ளார். 

இப்படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 

“செய்தித்தாள் ஒன்றில் நான் படித்த சம்பவம் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவே ‘மரகத நாணயம்’ படத்தின் தொடக்க புள்ளியாகும். பிறகு நான் அதில் சில சுவாரஸ்யமான சம்பவங்களை இணைத்தேன். தற்போது இப்படம் பெரியவர்களுக்கு மட்டும் இன்றி குழந்தைகளையும் கவர்ந்துள்ளது. இப்படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவரது அர்ப்பணிப்பும் உழைப்பும் என்னை ஆச்சிரியப்படுத்தியது.

இப்படத்தின் தூணாக இருந்தது எங்களது தயாரிப்பாளர் டில்லி பாபு தான். அவர் கொடுத்த ஊக்கமும் சுதந்திரமும் வார்த்தையில் அடங்காதவை. இக்கதையில் சில சுவாரஸ்யமான மர்ம முடிச்சுகள் உள்ளன. அதில் நிக்கி கல்ராணி மற்றும் அருண்ராஜா காமராஜின் கதாபாத்திரங்களும் அடங்கும். படத்துக்கு ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles