‘ராஜா ரங்குஸ்கி’ படத்துக்கு யுவனின் இசை புத்துயிர் அளிக்கும்! இயக்குநர் தரணிதரன்

Wednesday, July 5, 2017

வாசன் புரொடக்ஷன்ஸ், பர்மா டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ராஜா ரங்குஸ்கி’. படத்தின் நாயகனாக மெட்ரோ சிரிஷ், நாயகியாக சாந்தினி நடித்துள்ளனர். படத்தின் நாயகன் சிறந்த புதுமுக நாயகனுக்கான பிலிம் பேர் அவார்டை அண்மையில் பெற்றுள்ளது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் பின்னணி இசைக்காக முழுப்படத்தை பார்த்த யுவன், “கடந்த சில மாதங்களில் தான் இசையமைத்த படங்களிலேயே இதுதான் சிறந்த படம்” என்று பாராட்டு பத்திரம் வாசித்திருக்கிறார். மேலும், அதே சூட்டோடு படத்துக்கு பின்னணி இசையையும் தீவிரமாக அமைத்து வருகிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் தரணிதரன் பேசும்போது, 

“படத்தின் நாயகன் பெயர் ராஜா, நாயகி பெயர் ரங்குஸ்கி. இவ்விரு பாத்திரங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டதுதான் ‘ராஜா ரங்குஸ்கி’. நாயகி ஒரு எழுத்தாளர். எனவே அதற்கு தகுந்தாற்போல ஒரு பெயரை வைக்க வேண்டும் என முடிவு செய்தோம். அப்படியாக எங்களுக்கு கிடைத்துதான் மறைந்த பிரபல எழுத்தாளரான சுஜாதாவின் புனைபெயரான ரங்குஸ்கி. இசையமைப்பாளர் யுவனோடு இணைந்து பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது. என்னுடைய கதைக்களத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அவருடைய இசையமைப்பு இருக்கும். அது ரசிகர்களையும் திருப்திபடுத்தும்!” என்றார். 

ஏற்கனவே ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய தரணிதரன், இப்படம் மூலமாக தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 - கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles