பிக் பாஸ் நிகழ்ச்சியை புறக்கணியுங்கள் கமல்! நடிகர் மன்சூர் அலிகான் வேண்டுகோள்!

Tuesday, July 4, 2017

ஏ.பி.கே. பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம்  ‘உறுதி கொள்’. இப்படத்தில் ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக மேகனா நடித்துள்ளார்.  மேலும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு, நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, 
 
“தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு. அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும். பரவாயில்லை. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கக் கூடாது. 

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட். நாளை கமல் படம் வெளிவரும் போது அஜித்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னவாகும் என்று அவர் யோசிக்க வேண்டும்!” என்றார். 

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றதில் இருந்து, பல தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்கள் பலரின் எண்ணவோட்டமாக இருக்கிறது. இதை கமல் புரிந்துகொள்வாரா? 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles