தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்ட விருந்து பார்ட்டி!

Monday, July 3, 2017

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் பல்ஸ் பிடித்து படம் இயக்கி, வெற்றி வாகை சூடும் இயக்குநர்களில் வெங்கட் பிரபு முதலாமானவர் என்றால் அது மிகையில்லை. அவருடைய ‘சென்னை 28’, ‘கோவா’, ‘பிரியாணி’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட படங்களே அதற்கு சாட்சி. அந்தவகையில் தன்னுடைய படங்களில் நிகழ்கால இளைஞர்களின் வாழ்க்கையை விமர்சன யதார்த்தத்துடன் படம் பிடிப்பதோடு, கதையை போரடிக்காமல் கலகலவென நகர்த்தி செல்வதில் வல்லவர்.

அப்படியாக அவர் திரைக்கதை எழுதி, இயக்கவுள்ள புதிய படம் ‘பார்ட்டி’. இப்படத்தை 'அம்மா கிரியேஷன்ஸ்' பட நிறுவனம் சார்பில் ஜி.சிவா தயாரிக்கிறார். 

இப்படத்தில் சத்யராஜ், நாசர், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ஜெய் , ஷிவா, சம்பத், கயல் 'சந்திரன், ரெஜினா கசன்டரா, சஞ்சிதா ஷெட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் 'பார்ட்டி'யில் கலக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பிஜி தீவில் நடக்கவுள்ளது.'

இப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசும்போது, 

“ ‘சரோஜா’ மூலம் எனக்கு இரண்டாவது தாய் வீடான அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துக்காக இப்படத்தை இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி. 'பார்ட்டி' தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை” என்றார். வெங்கட் பிரபுவின் இந்தப் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார் பிரேம்ஜி என்பது கூடுதல் தகவல். ‘பார்ட்டி’ மூலம் 'அம்மா கிரியேஷன்ஸ் ' தனது 25 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles