தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! கர்மிக் திரில்லர் யுத்தியில் ‘கட்டம்’!

Monday, July 3, 2017

‘ஐ கிரியேட் வொன்டர்’ என்கிற புதிய பட நிறுவனம் சார்பில் சந்தியா ஜனா தயாரிக்கும் படம் "கட்டம்". புது முகங்கள் நிவாஸ் மற்றும் நந்தன் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நாயகியாக ஷிவ்தா நாயர் நடித்து உள்ளார். நவீன்-ஜே.சி, பால் இரட்டையர்கள் இசையமைக்க, டேமேல் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட்ரமணன் படத்தொகுப்பையும் பிரேம் அரங்கமைப்பையும் கவனிக்கின்றனர். இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் ராஜன் மாதவ். ஏற்கனவே ‘முரண்’ படம் மூலமாக தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவர். 

இப்படம் குறித்து இயக்குநர் பேசும்போது, 

"தமிழ் திரை உலகுக்கு கிரைம் த்ரில்லர் புதியது அல்ல. ஆனால் நாங்கள் கையாண்டு இருக்கும் “கர்மிக் திரில்லர்” யுத்தி மிகவும் புதிது. ‘வினை விதைத்தவன் வினை அருப்பான்’ என்பது பழமொழி, அதற்கு துணை நின்றவனும் வினை அருப்பான் என்பதே "கட்டம்" படத்தின் மைய கருத்து.  நாங்கள் படத்தை கையாண்டு இருக்கும் விதம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்ட வேலைகள் நடைப்பெற்றுக்கொண்டு இருக்கிறது. திரைக்கு வரும் கட்டத்தை நெருங்கி விட்டோம்" என்றார் ராஜன் மாதவ்.

தமிழ் திரை உலகில் 2017 ஆம் ஆண்டு இளம் இயக்குனர்களுக்கான வருடம் என்று சொன்னால் மிகையாது. புதிய கதைக் களன்கள், மாறுபட்ட திரைக்கதை உத்திகள், வேறுபட்ட பாத்திர வடிவமைப்பு என இளம் இயக்குநர்கள் இயக்கிய பல படங்கள் பெறும் வெற்றி வாகை சூடின. அந்தவகையில் ‘துருவங்கள் 16’, ‘மாநகரம்’, ‘எட்டு தோட்டாக்கள்’, ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, ‘மரகத நாணயம்’ போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். அதேபோன்று ‘கட்டம்’ திரைப்படமும் பேசப்படும், வசூல்வேட்டையாடும் என்கின்றனர் படக்குழுவினர்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles