‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது! சொல்கிறார் விஷாகா சிங்!!

Tuesday, January 31, 2017

விஷாகா என்றால் பன்முகத் திறமை கொண்டவர் என்று ஒரு அர்த்தம் உண்டு. பெயருக்கு ஏற்றவர்போல, அவர் ஒரு திறமையான நடிகை. சிக்கனமான  தயாரிப்பாளரும் கூட. அவரது ஒவ்வொரு பதிலும், போலியான சாயம் ஏதும் கலக்காமல் செறிவானதாக இருக்கிறது. படத் தயாரிப்பு, பிட்னஸ் போன்ற கலவையான கேள்விகளுக்கு விஷாகாவின் இன்ஸ்டன்ட் பதில் இதோ..

படத் தயாரிப்பாளராகவும் இருப்பதால், உங்களுக்கு மார்க்கெட் நன்றாகவே புரிந்திருக்கும். நீங்கள் நடிக்கும் படங்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

“ஒரு விஷயம் தெளிவா தெரிஞ்சுக்கோங்க. இதுவரைக்கும் நான் தயாரித்த படங்கள் கமர்ஷியலா போகலை. நல்ல சினிமாக்களை ப்ரோமோட் செஞ்சு,  மக்களுக்கு கொண்டு சேர்க்கணும்கிற ஐடியா இருந்ததால, அந்தப் படங்களைத் தயாரிச்சேன். அதோட கமர்ஷியல் எலிமெண்ட் இல்லாததால, நான் முதலீடு செய்யுற பணத்துக்கு ரொம்ப ரிஸ்க் இல்லை.

ஒரு ஸ்மார்ட் நடிகையா இருந்திருந்தா, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது. ஏன்னா, அதுல நான் கெஸ்ட் ரோல்லதான் நடிச்சிருப்பேன். ப்ரியா சொன்னதுக்காகத் தான், அந்தப் படத்தையே அக்செப்ட் பண்ணிக்கிட்டேன். “,பீல்டுல நல்ல பெயர் எடுத்துட்டு இருக்கும்பொழுது கெஸ்ட் ரோல் வேண்டாம். எல்லாத்துலயும் செகண்ட் ஹீரோயினாவே பிராண்ட் செஞ்சுடுவாங்க"ன்னு என் ப்ரெண்ட்ஸ் நிறையப்பேர் சொன்னாங்க. ஆனால், நான் அப்படி யோசிக்கவேயில்லை. 

எவ்ளோ பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, என் மனசுக்குப் பிடிச்சிருந்தா தான் நடிக்கவே சம்மதிப்பேன். நவரசம்னு ஒரு விஷயம் இருக்கு. ஒரே மாதிரி ஹோம்லியா மட்டுமே நடிக்காமல், விதவிதமான ரோல்கள்ல நடிக்கணும். இதுதான் என்னோட சாய்ஸ்.”

 

நீண்ட இடைவெளி விட்டு, தமிழ் படங்களில் நடிப்பதன் காரணம்?

“அது அப்படி அமைஞ்சுடுச்சு. ஆபர்ஸ் வந்துட்டுதான் இருந்துச்சு, ஆனால், அந்த நேரத்துல எல்லாம் என்னோட பெர்சனல் ஒர்க்ல மாட்டியிருக்கேன். 

எனக்கு மேனேஜர்ஸ் கிடையாது, நான்தான் என்னோட நேரத்தை நிர்வகிக்கணும். அது மட்டுமில்லாம, நான் சென்னை வாசி இல்லை. இதெல்லாம், தமிழ் படத்துல கமிட் ஆகுறதுக்கு எதிரா இருந்துச்சு. இதுக்கு இடையில ‘விவல்’ சோப் விளம்பரத்துல நடிச்சதை பார்த்துட்டு, பல மேரேஜ் ப்ரோபோசல் தமிழ்நாட்டு மக்கள்கிட்ட இருந்து வந்துச்சு. சந்தோஷமான விஷயம் என்னன்னா, இப்போவரை தமிழ் மக்கள் என்னை மறக்கவேயில்லை.”

 

தமிழ் படங்கள் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா?

“தமிழ் மொழி எப்போதுமே என் மனதுக்கு ரொம்ப நெருக்கம். தமிழ் படங்கள் தயாரிக்கணும்கிற ஆர்வம் எனக்கு இருக்கு. மும்பை சினிமா வர்த்தகம் புரிந்த அளவுக்கு, எனக்கு தமிழ் சினிமா மார்க்கெட் அவ்வளவா புரியல. அதனால, அதுபற்றி இன்னும் நல்லா தெரிஞ்சுக்கிட்டு, முழுவீச்சுல குதிச்சிடலாம்னு நினைக்குறேன்.”

 

விஷாகா சிங் - பிட்னஸ் ரகசியம்?

“சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் முடிஞ்சுடுச்சு. எப்படி அப்படியே இருக்கீங்கன்னு, நிறைய பேர் என்கிட்ட ஆச்சரியமா கேட்பாங்க. இந்தப் பத்து வருஷத்துல நான் 6 கிலோ ஏறியிருக்கேன். இதுக்குமேல எடை ஏறக்கூடாதுன்னு முடிவெடுத்திருக்கேன். கிராஷ் டயட் எடுக்காதீங்க, எதைச் சாப்பிட்டாலும் அளவாக சாப்பிடுங்க. மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க. எப்போதும் யாருக்கும் கெடுதல் நினைக்காதீங்க. இதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு, என் பெற்றோர் சொல்லிக்கொடுத்தது.”

 

சில வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறீர்களே, இதுபோன்ற விஷயங்களை எதிர்த்து படம்  இயக்கும் எண்ணம் இருக்கிறதா?

“இதுவரைக்கும், என் வாழ்க்கையில எந்த விஷயத்தையும் திட்டமிட்டதில்லை. சந்தர்ப்பம் ஏற்பட்டதால், நடிக்க வந்தேன், அப்புறம் படம் தயாரிச்சிட்டு இருக்கேன். படம் இயக்குறதுல, நிறையா ஆர்வம் இருக்கு. 

நீங்க குறிப்பிட்ட மாதிரி, நான் தொடர்ந்து சில வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துட்டு தான் வர்றேன். ஆண்கள் மட்டுமில்லை, சில பெண்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்குறேன். சில பெண்கள் தங்களுக்கு தோதா இருக்குற சட்டத்தை, ஆண்களுக்கு எதிரா பயன்படுத்தி, அவங்களை கொடுமைக்கு உள்ளாக்குறாங்க. அதையும் எதிர்த்து குரல் கொடுத்திட்டு தான் இருக்கேன்.” 

திரையில் அழகாக நடிப்பது மட்டுமல்ல, பொதுவெளியில் அழகாகப் பேசவும் செயல்படவும் தெரியும் என்று நிரூபிக்கும் நடிகைகள் மிக சொற்பம். அவர்களில் தானும் உண்டு என்பதைப் பறைசாற்றுகிறார் விஷாகா சிங்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles