என்னைவிட, அம்மாதான் ரொம்ப அழகு! வியக்கும் பார்வதி நாயர்!! 

Tuesday, January 31, 2017

உத்தம வில்லனில் கமலின் மகள், என்னை அறிந்தால் படத்தில் வில்லி, சமீபத்தில் வெளியான ‘கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தில் ‘ஜிலீர்’ நாயகி. ஊற்றப்படும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு உருமாறும் நீர் போல, ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறாக தரிசனம் தருபவர் பார்வதி நாயர். தான் விருப்பப்படும் உணவை எந்தக் கட்டுபாடுகளும் இல்லாமல் ஒரு கட்டு கட்டுவது, இவரது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.

எவ்வளவு சாப்பிட்டாலும், எப்படி இப்படி சிக்கென்று இருக்க முடிகிறது என்ற ரகசியத்தை அவரிடம் கேட்டோம். முத்துப்பல் தெரிய சிரித்தவர், அதற்கான காரணங்களை விளக்கினார். 

 

பிட்னஸ் ரகசியம் ?

“உணவு வகைகள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எவ்ளோ சாப்பிட்டாலும் வெயிட் போடவே மாட்டேன். குறைவா சாப்பிட்டால், இன்னும் ஒல்லியா இருப்பேன். அதனால, உடம்பை குறைக்கிறதுக்கு நான் ரொம்ப மெனக்கெட்டது இல்லை.

உடற்பயிற்சி மனசையும் உடலையும் ஆரோக்கியமா வச்சிருக்கும். உடற்பயிற்சி செய்யணும்னு எனக்கு விருப்பம் உண்டு. ஆனால், நான் அதைச் செய்றது இல்லை. இந்த ஒல்லியான உடல்வாகு, பெற்றோர்கள்கிட்ட இருந்து எனக்கு கிடைத்த வரம். எனக்கு, எப்போதுமே எண்ணெய் பதார்த்தங்கள் பிடிக்காது. அதனால, நான் அதை தவிர்த்திடுவேன். லிஃப்ட் இருந்தால் கூட, படிக்கட்டுகளைத்தான் உபயோகப்படுத்துவேன். 

ரொம்ப சின்ன குழந்தையா இருக்கும்பொழுது, என்னை எல்லாரும் க்யூட்டா இருக்கேன்னு சொல்லுவாங்க. வளர வளர, கொஞ்சம் பாயிஷ் லுக் வந்துடுச்சு. என்னைவிட, எங்க அம்மா ரொம்ப அழகா இருப்பாங்க. கேரளாவைச் சேர்ந்தவங்க எப்போதுமே ரொம்ப அழகா இருப்பாங்கன்னு, எல்லாரும் எங்கிட்டே சொல்லிட்டே இருப்பாங்க. கேரளாவைச் சேர்ந்தவளா எனக்கு இதுல பெருமை தான். இருந்தாலும், என்னை பொறுத்தவரை அழகு என்பது பார்ப்பவர்களோட கண்கள்லதான் இருக்கு. ஏன்னா, இந்த பூமியில பிறந்தவங்க எல்லோரும் ஒவ்வொரு விதத்துல அழகு.” 

 

நீங்கள் பயன்படுத்தும் அழகுக்குறிப்புகள் சில..

“அழகா இருக்கணும்னு ஆசைப்பட்டாலும், அதுக்காக நான் ரொம்ப மெனக்கெடறது இல்லை. அழகா ஒருத்தரை பார்த்தேன்னா, அவங்களை பார்த்துகிட்டே இருக்கணும்னு தோணும். அந்தமாதிரி, நடிகை ரம்யா கிருஷ்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த வயசுலயும் அவ்ளோ சூப்பரா இருக்காங்க. அந்த வயசுல நான் எப்படி இருப்பேன்னு தெரியல.

உள்ளத்தோட அழகுதான் உண்மையான அழகுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. எப்போதுமே சந்தோஷமா இருக்க பழகிக்கோங்க. உங்களைச் சுற்றி இருக்குறவங்களை மகிழ்ச்சியா வச்சுக்கோங்க. இயற்கையா கிடைக்குற காய், பழங்களை அதிக அளவுல எடுத்துகோங்க. எண்ணெய் சேர்த்த பதார்த்தங்களை தவிர்த்துடுங்க. அதோட, நிறையா தண்ணீர் குடிங்க. உங்க உடம்புல இருக்குற அதிகப்படியான அழுக்குகளை அது எடுத்துடும். உங்கள் தோலுக்கு தனி மினுமினுப்பு கொடுக்கும்.” 

 

பெண்களின் ஹேண்ட் பேக்கில் கட்டாயம் இருக்க வேண்டியவை? 

“நம்மளோட காலநிலைக்கு தக்கபடி, சன் ஸ்க்ரீன் வச்சுக்கோங்க. லிப் பாம் அல்லது சேப் ஸ்டிக் எப்போதும் வச்சுக்கோங்க. வாட்டர் பாட்டில் எப்போதுமே பேக்ல எடுத்துட்டு போங்க. அடிக்கடி தண்ணீர் அருந்துனீங்கன்னா, டீஹைட்ரேட் ஆகாமல் இருக்கும். கைவசம் காம்பேக்  வச்சிக்கிட்டிங்கன்னா, சட்டுனு ரெபிரஷ் செஞ்சு மேக்கப் போட வசதியா இருக்கும். எப்போதுமே எவ்வளவுக்கு எவ்ளோ சிம்பிளா இருக்கீங்களோ, அவ்வளவு நீங்க அழகா இருப்பீங்க.”

 

உங்கள் ரோல் மாடல் யார்?

“யார்கிட்டே என்ன நல்லது இருந்தாலும், யோசிக்காம அதை பின்பற்றுவேன். என்னோட ரோல் மாடல்னு, எப்போதும் ஒருத்தரை கைகாட்டுறதே கிடையாது. அருமையான பேரன்டிங்குக்கு, எங்க மதர் எனக்கு ரோல் மாடல். ஐஸ்வர்யா ராய் குடும்பத்தையும் பார்த்துகிட்டு, தன்னோட கேரியரையும் பார்க்குறாங்க. அப்புறம் நடிகை ஷோபனாவை எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். இப்படி, இந்த லிஸ்ட் நீளும்.” பார்வதி நாயரின் முகத்திலும் உடல்மொழியிலும் வியப்பு தொடர்கிறது. 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles