பொங்கல் விருந்தாக பைரவா!

Thursday, January 5, 2017

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள படம் 'பைரவா'. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமையா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, 'ஆடுகளம்' நரேன், ஸ்ரீமன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

'பைரவா' படத்தின் டீசர் வெற்றிக்கு பின், அப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களை குஷிப்படுத்தும் வகையில் டிசம்பர் 31 ஆம் தேதி இரவு ட்ரெய்லர் வெளியானது; மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. அதோடு, தமிழ் சினிமாவுலகில் வெளிவந்த ட்ரெய்லர்கள் படைத்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்தது. இதுவரை 5 மில்லியன் பேருக்கு மேல் இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

'பைரவா' திரைப்படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், அதற்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். பொங்கல் விருந்தாக, இப்படம் ஜனவரி 12ம் தேதி படம் வெளியாகிறது. இது இளையதளபதி விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles