குஷ்புவை களமிறக்கும் விஷால்!

Monday, January 2, 2017

தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பழைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இதனையடுத்து, வருகிற பிப்ரவரி மாதம் 15ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறவுள்ளது. வழக்கத்தைப் போலவே, இந்த ஆண்டும் பலர் தனித் தனி குழுக்களாகத் தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்கள். 

சில நாட்களுக்கு முன்பு வரை, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் களமிறங்குவார் என்ற தகவல் உலா வந்தது. அதனை யார் ஆதரிப்பார்கள்? யார் எதிர்ப்பார்கள் என்பது பற்றிய யூகங்களும் அதிகமாகக் கிளம்பின. இச்சூழலில், விஷால் தலைமையிலான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதனையடுத்து, விஷால் அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு குஷ்பூ சுந்தரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, ’அலையை எதிர்த்து நீந்துவதும் வெற்றிபெறுவதும் தான் வாழ்க்கை, ஒரு குழுவாக நேர்மையுடனும் கடின உழைப்புடனும் களமிறங்கி மாற்றத்தை உண்டாக்குவோம்’ என்றிருக்கிறார். அதோடு, விஷாலுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார். 

மற்ற நிர்வாகிகளுக்கான  தேர்வு குறித்தும், விஷால் தனது அணியினர் உடன் ஆலோசித்து வருகிறாராம். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்கிறது கோலிவுட் வட்டாரம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles