சிம்மாசனத்தில் விஜய் ஆண்டனி..?!

Friday, February 17, 2017

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் கிராஃப், படத்துக்குப் படம் எகிறிக்கொண்டே இருக்கிறது. அந்தவகையில், 'எமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஜல்லிக்கட்டு ஸ்டைலில் போஸ்டர் அமைக்கப்பட்டிருந்தது தான் ஹைலைட்! படத்தின் கதை, திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் ஜீவா சங்கர். விஜய் ஆண்டனியின் முதல் படமான ‘நான்’ படத்தின் இயக்குனர் இவர். இந்தப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். 

இப்படம் குறித்து ஜீவா சங்கர் பேசும்போது, 

"ஒரு ரசிகனின் கண்ணோட்டத்தில் இருந்து தான், நான் எப்பொழுதும் கதை எழுதுவேன். அதற்குப்பிறகு தான் அதை எப்படி காட்சிப்படுத்தலாம் என்பதை ஒரு இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் சிந்திப்பேன். 'எமன்' படத்தின் கதையையும் அந்த வகையில் தான் உருவாக்கி இருக்கிறேன். ஒரு சராசரி மனிதன், அரசியல் மூலமாக தன்னுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொண்டு, சிம்மாசனத்தில் அமர முயற்சி செய்கிறான். அதில் அவன் வெற்றி பெற்றானா? இல்லையா? என்பது தான் 'எமன்' படத்தின் கதை.  தன்னுடைய முழு அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் கொடுத்து, 'எமன்' படத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார் விஜய் ஆண்டனி!" என்றார்.

'எமன்' திரைப்படத்தை, 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கமும் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனியும் இணைந்து தயாரித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'எமன்', வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிறது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles