மெகா பட்ஜெட்டில் உருவாகும் #பிரபாஸ்19!

Wednesday, February 15, 2017

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவர் பிரபாஸ். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டு உச்சநட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தனித்துவமான நடிப்பால் அனைவரையும் அசத்திய நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார்.

2013 ஆம் வருடம் யு.வி. கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் மற்றூம் அனுஷ்கா நடிப்பில் 'மிர்ச்சி' எனும் படம் வெளியாகி, வசூலில் வெற்றிக்கொடி நாட்டியது. தற்போது அந்த நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் பிரபாஸ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு சங்கர் - இசான் - லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார்.

சமீபத்தில் பூஜையுடன் துவங்கிய #பிரபாஸ் 19 படத்தை கிருஷ்ணம் ராஜு கிளாப் போர்டு தட்ட, தில் ராஜு கேமராவை ஆன் செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் நடிகர் பிரபாஸ், இயக்குனர் சூஜித் சைன், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles