அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'!

Friday, February 10, 2017

'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் புதிய படம் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கும் இந்தப் படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். 

படம் குறித்து மு.மாறன் பேசும்போது, 

"பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில், 'இரவுக்குதான் ஆயிரம் கண்கள்' இருக்கின்றது. எங்கள் படத்திற்கும், இரவுக்கும் இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்தப் படத்திற்கு 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'  என்று தலைப்பு வைத்துள்ளோம். 

ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பது தான் இந்தப் படத்தின் ஒரு வரி கதை. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எங்களின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' கதை நகர்வதால், விறுவிறுப்பிற்கு எந்த விதத்திலும் குறை இருக்காது. 

ஒரு நடிகர் என்பதைத் தாண்டி, அருள்நிதி சாரை ஒரு உன்னதமான மனிதனாக ரசிக்கிறேன். அவரோடு இணைந்து பணியாற்றுவது, எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. எனக்கு ஒரு வலுவான நம்பிக்கையை கொடுத்து, உறுதுணையாய் இருந்துவரும் தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி முதல் படப்பிடிப்பைத் துவங்க இருக்கிறோம். படத்தில் பணியாற்ற இருக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைப் பற்றிய தகவல்களை இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிப்போம்" என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles