’அண்ணாதுரை’யாகும் விஜய் ஆண்டனி!

Thursday, February 9, 2017

தென்னிந்திய சினிமா வர்த்தகத்தில் தனக்கென்று தனித்துவமான அடையாளத்தை சமீபத்தில் பெற்றிருப்பவர் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. ரசிகர்களின் பல்ஸ் பிடித்து கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதால், மொழிகளைக் கடந்து பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பொதுவாக, அவர் நடிக்கும் படங்களின் தலைப்புகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும். அதற்காகவே ஒரு குழு ரூம் போட்டு யோசிக்கிறதோ என்ற பிரமிப்பை ஏற்படுத்தும். 'பிச்சைக்காரன்', 'சைத்தான்', 'எமன்' போன்ற படங்களின் தலைப்புகளை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். இந்நிலையில், அவருடைய அடுத்தப் படத்துக்கான தலைப்பு "அண்ணாதுரை" என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை 'ஐ பிக்சர்ஸ்' சார்பில் ஆர்.சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்குகிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் ஆவார்.

இப்படம் குறித்து இயக்குநர் ஸ்ரீநிவாசன் கூறும்போது,
"விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர நாயகனோடும், 'ஐ பிச்சர்ஸ்' போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகின்றேன். தலைசிறந்த தலைவர்களுள் ஒருவரான 'அண்ணாதுரை'யின் பெயரை தலைப்பாகக் கொண்ட இந்தப் படம், அவரின் வாழ்க்கையைச் சார்ந்து இல்லாமல், வேறொரு கதைக்களத்தில் உருவாக இருக்கின்றது. நிச்சயமாக எங்களின் படம் விஜய் ஆண்டனியின் ரசிகர்களை அதிகளவில் உற்சாகப்படுத்தும். தற்போது, படப்பிடிப்புக்கான பணிகளில் நாங்கள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறோம்" என்றார். 

இதுவரை, மிரட்டலாக மட்டுமே விஜய் ஆண்டனியின் படங்களுக்கு தலைப்பு வைக்கப்பட்டது. அதிலிருந்து விலகி அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான "அண்ணாதுரை"யின் பெயரையே படத்துக்கு சூட்டியுள்ளது, கோலிவுட்டில் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது! 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles