மாறுபட்ட பாத்திரத்தில் சிபி! 

Thursday, February 9, 2017

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களன்களை தேர்வுசெய்து வெற்றிகளைப் பெற்றுவரும் நட்சத்திரங்களின் பட்டியலில் சிபிராஜுக்கும் இடம் உண்டு. 'நாய்கள் ஜாக்கிரதை',  'ஜாக்சன் துரை' உள்ளிட்ட படங்களையே அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்படங்களைத் தொடர்ந்து, அவர் 'கட்டப்பாவ காணோம்', 'சத்யா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது, அறிமுக இயக்குநர் வினோத் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிபிராஜ். 

இப்படம் குறித்து இயக்குநர் வினோத் பேசும்போது, "சமூதாய பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை, நாங்கள் சென்னை, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் என மூன்று வெவ்வேறு இடங்களில் படமாக்க உள்ளோம். படத்தின் கதைக்களம் மூன்று இடங்களில் பயணித்தாலும், அதை ஒரே மையப்புள்ளியில் கொண்டுவந்து இணைத்திருப்பது தான் இந்த கதையின் மிக முக்கியமான சிறப்பம்சம். 

முதல் படத்திலேயே சிபிராஜோடு இணைந்து பணியாற்றுவது, அளவு கடந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. இதுவரை ரசிகர்கள் எவரும் கண்டிராத புதிய பாத்திரத்தில் சிபிராஜ் நடிக்கிறார். இந்த வித்தியாசமான கதாபாத்திரம், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கும்" என்றார். 

அதிரடி கலந்த திரில்லர் பாணியில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இந்தப் படத்தை 'பாஸ் மூவீஸ்' சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கிறார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles