தமிழில் ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்!

Wednesday, February 8, 2017

'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர்.எஸ்.கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி.ஜி. முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'பீச்சாங்கை'. இப்படத்தை அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கியுள்ளார். படத்தின் நாயகன், நாயகியாக கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் நடித்துள்ளனர். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா பேசும்போது,

"எங்கள் படத்தின் கதாநாயகன் இடதுகை பழக்கம் உள்ள ஒரு திருடன். தான் செய்யும் திருட்டுத் தொழிலை மிகவும் கௌரவமாகக் கருதும் அவனுக்கு, ஒரு கட்டத்தில் 'ஏலியன் ஹாண்ட் சின்ட்ரோம்' என்கிற ஒரு குறைபாடு ஏற்படுகின்றது. அதன்பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை மையமாகக் கொண்டு தான், எங்களின் 'பீச்சாங்கை' படத்தின் கதைக்களம் நகரும். கதாநாயகன் - கதாநாயகி உட்பட படத்தில் பணிபுரிந்திருக்கும் பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் புதுமுகங்கள் தான். நிச்சயமாக இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது" என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles