என்னுடைய வளர்ச்சிக்கு ரசிகர்கள்தான் காரணம்! நடிகர் விஜய் ஆண்டனி!

Friday, February 3, 2017

'நான்' படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனியும், இயக்குநர் ஜீவா சங்கரும் இணைந்து பணியாற்றி இருக்கும் திரைப்படம் 'எமன்'. 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' மற்றும் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி இந்த படத்தை  தயாரித்திருக்கிறார். 

இப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, 

"ஒரு திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிப்பது ரசிகர்கள். அவர்களின் அன்பும், ஆதரவும் தான் என்னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம். எனவே  'எமன்' படத்தின் பாடல்களை என்னுடைய ரசிகர்கள் மத்தியிலும், பொதுவான சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வெளியிட ஆசைப்படுகிறேன். அவர்களை  இந்த  இசை வெளியீட்டு விழாவிற்கு அன்போடு அழைப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன்" என்றார்.

'எமன்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 4 ஆம் தேதி சனிக்கிழமை அன்று, சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற உள்ளது.
  
- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles