'வீரமாதேவி' யாக நடிக்கிறார் சன்னி லியோன்!

Friday, December 29, 2017

முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட கதையில் சன்னி லியோன் நடிக்கும் படத்துக்கு ‘வீரமாதேவி’ என பெயர்சூட்டியுள்ளனர். ஸ்டீவ்ஸ் கார்னர் பட நிறுவனம் சார்பில் பொன்செ. ஸ்டீபன் தயாரிக்கும் இப்படத்தை வி.சி. வடிவுடையான் இயக்குகிறார். 

தென்னகத்தின் வரலாற்று பின்னணியை கொண்ட மிக முக்கியமான வீரமங்கையின் பெயர் வீரமாதேவி ஆகும். இந்தப் பாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். மிக பிரமாண்டமான போர் காட்சிகள் படத்தில் இடம் பெறுவதால் அதற்காக போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மளையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன் என்பது குறிப்பிடத்தக்கது!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles