‘மாயநதி’யில் மாறுபட்ட நடிப்பில் ஹரிஷ் உத்தமன்!

Friday, December 29, 2017

ட்ரீம் மில் சினிமாஸ் மற்றும் மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மாயநதி’. படத்தில்   டொவினோ தாமஸ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை 'மாயநதி'. ஆஷிக் அபு இயக்கியுள்ளார். அண்மையில் மலையாளத்தில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஹரிஷ் உத்தமன் அதுபற்றி பேசும்போது,

"இது என்னுடைய 28வது படம். இவ்வளவு படங்கள் மூலம் எனக்கு கிடைத்த பேர், புகழை விட இந்தப் படத்தில் கிடைத்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் நான் நடிக்க காரணம் இணை இயக்குநர் பினு. இந்த மாதிரி நிறைய படங்கள் தமிழில் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் கொடுத்த பாத்திரத்தை மேலும் மெறுகேற்றி நடித்திருக்கிறார். 

நாயகி ஐஸ்வர்யா லக்‌ஷ்மியுடன் ஒரு காட்சியில் தான் நடித்தேன். இந்த மாதிரி ஒரு சிறந்த படம் கிடைத்தது அவரின் அதிர்ஷ்டம். தமிழிலும் அவர் படங்கள் நடிக்க வேண்டும். படத்தின் கதாசிரியர்கள், தயாரிப்பாளரும் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நிறைய பங்களிப்பு செய்தார்கள். இளவரசு சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தமிழ், தெலுங்கு படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் தான் என்னை பார்த்திருப்பீர்கள். இந்த கதாபாத்திரம் நிச்சயம் எனக்கும், உங்களுக்கும் புதுமையாக இருக்கும். இதை எனக்கு அளித்த இயக்குனர் ஆஷிக் அபுவுக்கு நன்றி" என்றார்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles