‘நிமிர்’ தலைப்பை பரிந்துரை செய்த இயக்குநர் மகேந்திரன்!

Thursday, December 28, 2017

சந்தோஷ் ஜி குருவில்லா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நிமிர்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி, வி.ஷி.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிக்க, ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். 

படத்தின் தலைப்பு சமூக வலைதளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகி வருகிறது. அது குறித்து இயக்குநர் கூறும்போது, 

“எனது ஆரம்ப காலத்திலிருந்தே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் பெரிய  ரசிகன் நான். அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிய ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. அவர் 'நிமிர் ' படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு மிக பெருமையான விஷயம். நான்  பல காலமாக ஒருவருக்கு ரசிகனாக இருந்து, தற்பொழுது அவரையே இயக்குவது என்பது மிகப்பெரிய சந்தோஷத்தை தருகின்ற ஒரு உணர்வு.

இப்படத்தின் கதையை முழுவதும் கேட்டதும் மகேந்திரன் சார் தான் 'நிமிர்' என்ற தலைப்பை பரிந்துரை செய்தார். இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பை எங்களால் யோசிக்க முடியாது. படத்தில் ஹீரோவின் தந்தை பாத்திரத்தில் மகேந்திரன் சார் நடித்துள்ளார். இந்த தந்தை மகன் உறவே இக்கதையின் அடித்தளம் ஆகும். 'நிமிர்' மிகவும் திருப்திகரமாக வந்துருக்கின்றது” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles