'ஜருகண்டி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் ஆர்.டி.ராஜசேகர்!

Monday, December 18, 2017

Shvedh நிறுவனம் மூலம் நிதின் சத்யா தயாரிக்கும் படம்  ‘ஜருகண்டி’. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். படத்தை பிச்சுமணி இயக்கி வருகிறார். படத்துக்கு, முதலில் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தார்.

இப்படத்தில் இருந்து அவர் விலகியதால், அவருக்கு பதிலாக ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இது குறித்து நிதின் சத்யா கூறும்போது,  

"திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்து உள்ள ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்.டி.ராஜசேகர் அவர்களுடைய அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை  ஊக்குவிக்கும். அவரது தொழில் நுட்பம் உலக தரத்துக்கு இணையானது. அதுவே எங்களுக்கு பெருமை" என்றார். 

படத்தில் அமித் குமார் திவாரி வில்லனாக நடிக்கிறார். மேலும்,  ரோபோ ஷங்கர், இளவரசு , காவ்யா ஷா உள்ளிட்டோரும் உடன்  நடிக்கின்றனர். 'ஜருகண்டி' படத்தை Shraddha entertainment நிறுவனம் சார்பில் இணைந்து தயாரிக்கிறார் பத்ரி கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக். 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles