சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

Friday, December 15, 2017

தமிழ் சினிமாவில் தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து, நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். அந்தவகையில் அவர் கடைசியாக ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், அவர் தனது அடுத்தப் படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் நடிக்கும்  

புதிய படத்துக்கு சீனு ராமசாமி இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 

இது பற்றி நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, 

“எனக்கு சீனு ராமசாமியின் படங்கள் என்றால் மிக மிக பிடிக்கும். அவரது படங்களில் மனித உணர்வும், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் கதை அம்சமும் நிச்சயம் இருக்கும். ஏற்கனவே தேசிய விருது பெற்ற ‘நீர் பறவை’ படத்தை தயாரித்தவன் என்ற முறையில் அவருடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் நிறுவனத்துக்கு மிகுந்த சந்தோஷம். இப்போது அவரது இயக்கத்தில் தயாரித்து, நடிப்பதில் எனக்கு  பொறுப்பும், விருப்பமும் அதிகம். 

2018 ஜனவரி மாதம் 19 ஆம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles