நீண்ட இடைவெளிக்குப் பின் படம் இயக்குகிறார்  நடிகர் விஜய் நடித்த ‘ஷாஜகான்’ பட இயக்குநர்

Monday, December 11, 2017

திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ்  தயாரிக்கும் படம் ‘செயல்’. ராஜன் தேஜேஸ்வர் நாயகனாக நடிக்க, நாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மேலும், ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா, வில்லனாக சமக் சந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

படம் பற்றி இயக்குநர் பேசும்போது 

“வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வாங்க வந்த ஹீரோ எதிர்பாராத விதமாக தாக்க நேரிடுகிறது. இதனால் மார்கெட்டில் ரவுடி தண்டபாணியின் மீது மக்கள் வைத்திருந்த பயம் போய்விடுகிறது இதனால் அவன் மார்கெட்டை இழக்க நேரிடுகிறது.  மீண்டும் அந்த மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்றால், ஹீரோவை அதே மார்கெட்டில் வைத்து பொதுமக்கள் பார்க்கும் படி தாக்க வேண்டும். ஹீரோவை மார்கெட்டில் வைத்து அடித்தால் மட்டுமே ரவுடி தண்டபாணியின் கைக்கு மார்கெட் கிடைக்கும்.

இந்த சூழலில் ரவுடி ஹீரோவை அடித்தானா? அல்லது ரவுடியை ஹீரோ அடித்தானா ? மார்கெட் யார் வசம் சென்றது என்பதை அதிரடி கலந்த நகைச்சுவையுடன் புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதில் ஹீரோ செய்த ஒரு நல்ல செயல் அடுத்தவர்களையும் செய்ய தூண்டுகிற செயலாக இருக்கும். இதில் நாயகியாக நடித்திருக்கும் தருஷி ஹீரோ தன்னிடம் காதலை சொல்ல வரும் போதெல்லாம் அவர் செய்யக் கூடிய  விஷயங்கள் அனைவரையும் கவரும்!” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles