நல்ல விலைக்கு கைமாறிய விமலின் ‘மன்னர் வகையறா’!

Friday, December 8, 2017

A3V சினிமாஸ் தயாரித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. விமல் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், யோகி பாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் பூபதி பாண்டியன் படத்தை இயக்கியுள்ளார். 

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்  பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை நல்ல விலை கொடுத்து சினிமா சிட்டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அரவிந்த்சாமி - த்ரிஷா நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘சதுரங்க வேட்டை-2’ படத்தையும் இந்த நிறுவனம் தான், தமிழகம் முழுக்க வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஜனவரி மாதம் பொங்கல் திருநாளன்று படம் வெளியாகிறது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles