ரசிகர்களுக்கு இனிக்குமா எஸ்.பி.மோகனின் ‘பஞ்சுமிட்டாய்’!

Friday, December 8, 2017

இந்தியாவின் முதல் மாய யதார்த்தவாத படம் ‘பஞ்சு மிட்டாய்’. படத்தின் நாயகனாக மா.கா.பா. ஆனந்த், நாயகியாக நிகிலா விமல் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்கியுள்ளார் எஸ்.பி.மோகன்.

“சில நல்ல படங்களை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம், அது காலம் கடந்து நிற்கும். அந்த இடத்தை ‘பஞ்சு மிட்டாய்’ பிடிக்கும்” என்கின்றனர் படக்குழுவினர். 

படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். முதல் முறையாக மாய யதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத யதார்த்த நிகழ்ச்சிகளை மாய யதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த ‘பஞ்சுமிட்டாய்’. இந்த படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் சொல்லப்பட்டிருக்கிறதாம்!.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles