‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா!

Thursday, December 7, 2017

ஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.

இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும் கலந்து எடுக்கப்பட்டுள்ளது. பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா பாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்க வைத்துள்ளனர். மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்ற சௌரப் ஜெயின் வேங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

‘பாகுபலி’ படத்துக்கு இசையமைத்து புகழ்பெற்ற கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். 

இது பல ஆன்மீக புராணம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது. பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பாகுபலிக்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.  படத்தை ஸ்டார் பாக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடுகிறது.

கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles