நிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி!

Wednesday, December 6, 2017

ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .

இது குறித்து இயக்குநர் ரோஷன் ஆண்டிரூஸ் பேசும்போது, “சூர்யா மற்றும் ஜோவின் இந்த 'சர்ப்ரைஸ் விசிட்' எங்கள் அனைவரையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சூர்யா மற்றும் ஜோதிகாவுடனான எனது நட்பு '36 வயதினிலே' படத்தின் மூலம் மேலும் வளர்ந்தது. பலமான, அழகான நட்பு எங்களுக்குள் உள்ளது. எனது படப்பிடிப்பு தளத்திற்கு அவர்கள் இருவரும் வந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷம். 

'காயம்குளம் கொச்சுண்ணி' படத்தை பற்றிய  தகவல்களை மிகுந்த ஆர்வத்துடன் சூர்யா என்னிடம் கேட்டறிந்தார். சூர்யா மற்றும் ஜோதிகா என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடே அவர்களது இந்த 'சர்ப்ரைஸ் விசிட்'. அவர்கள் இருவரும் எனக்கு எனது குடும்பம் போல!” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.

 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles