கௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’? 

Wednesday, December 6, 2017

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா  தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன்,  சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன். 

படம்  குறித்து இயக்குநர் கூறியபோது,                                             

“காதல் சண்டையும், கபடிச் சண்டையும் தான் படத்தின் கதைக்களம். வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்திலும் நீரு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது சாதி வெறி. தென்மாவட்டங்களில் அது கொழுந்து விட்டு எரிகிறது. தருமபுரி கலவரங்கள், வட மாவட்டங்களிலும் சாதியின் வன்மத்தை பதிவு செய்கின்றன. இப்படிப்பட்ட கௌரவக் கொலைகளின் நியாய, அநியாயங்களை பொறி பறக்கும் வார்த்தைகளால் அலசும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது இப்படத்தின் திரைக்கதை. கிளைமாக்ஸ் காட்சி மனசாட்சி உள்ள அத்தனை பேரையும் உலுக்கி எடுக்கும். பக்கா கமர்ஷியல் படமாக ‘அருவா சண்ட’ உருவாகி வருகிறது!” என்றார்.

படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதிகள், மதுரை, பொள்ளாச்சி, சேலம், கேரளா பகுதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது.  

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles