சரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்! 

Wednesday, December 6, 2017

ட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

படத்தில் நடிப்பது பற்றி நடிகர் நகுல் கூறியபோது, 

“ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் நடித்திருக்கும் படம் ‘செய்’. இதில் சரவெடி சரவணன் என்ற கேரக்டரில் நடிக்கிறேன். அனைத்து கமர்சியல் எலிமெண்ட்டுகளும் சரியான அளவில் இருக்கும் படம் இது. படத்தின் இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் பற்றி சொல்லவேண்டும் என்றால், முதலில் சற்று தயக்கமாகத்தான் இருந்தது. அவர் கம்போசிங் செய்த பாடலை கேட்டவுடனே நான் தீர்மானித்துவிட்டேன். இவர் வேற லெவலுக்கு உயர்வார் என்று தெரிந்தது. 

யுகபாரதி எழுதிய, ‘ஊரெல்லாம் என் கட் அவுட் நிக்குமே.. பேப்பரெல்லாம் என்ன அச்சடிச்சி விக்குமே..’ எனத் தொடங்கும் பாடல் ஒரு ஆக்டரா என்னோட பேவரைட். இயக்குநர் ராஜ்பாபு சார் ஸ்பாட்டில் என்ன தேவையோ அதை மனதிற்குள்ளேயே எடிட் செய்து படமாக்கியது அவரது அனுபவத்தை எடுத்துக் காட்டியது. படக்குழுவினருக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்!” என்றார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் மன்னு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதிய ராஜேஷ் கே ராமன், இயக்குநர் ராஜ்பாபு, இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ், ஒளிபபதிவாளர் விஜய் உலகநாத், படத்தொகுப்பாளர் கோபிகிருஷ்ணா, நடிகர்கள் வெங்கட், ஆஞ்சல், சந்திரிகா ரவி, யமுனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles