பெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'!

Wednesday, December 6, 2017

சந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பெரிய தொகை கொடுத்து பிரபல சேனல் பெற்றுள்ளது. 

இது குறித்து தொலைக்காட்சியின் பொது மேலாளர் பேசும்போது, “குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக்கூடிய அழகான  படங்களை கண்டெடுத்து வாங்குவதில் நாங்கள் என்றுமே முனைப்போடு உள்ளோம். 'நிமிர்' அவ்வாறான ஒரு ஜனரஞ்சக குடும்ப படம். இப்படத்தின் சேனல் உரிமத்தை பெற்றுள்ளதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. உதயநிதி சாருடனும் இயக்குனர் ப்ரியதர்ஷன் சாருடனும் வரும் காலங்களிலும் சேர்ந்து பணிபுரிய ஆவலோடு உள்ளோம்” என்றார். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles