‘லிப் லாக்’ காட்சிகளில் நிச்சயம் நடிப்பேன் - நடிகர் சிபிராஜ் உறுதி!

Tuesday, December 5, 2017

சமீபத்தில் ‘சத்யா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் சத்யராஜ், நாயகன் சிபிராஜ், நாயகி ரம்யா நம்பீசன், நடிகர் ஆனந்த்ராஜ், சதீஷ், இசையமைப்பாளர் சைமன் ரி கிங், ஒளிப்பதிவாளர் அருண் மணி, எடிட்டர் கௌதம் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

விழாவில் ‘சத்யா’ குறித்து, நடிகர் சிபிராஜ் கூறும்போது, 

“தெலுங்கில் வெளியான ‘சனம்’ படத்தை நான் முதலில் திரையரங்கில் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும், தங்கையும் படத்தை பார்த்தனர் அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் கலந்து பேசி ‘சனம்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கலாம் என்று முடிவு செய்து, வாங்கினோம். நான் ‘சனம்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை ட்விட்டரில் அறிவித்தேன். இதை அறிந்த என் நண்பரான நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை பற்றி என்னிடம் கூறினார். அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். 

‘படம் ஆரம்பிக்கும் போது என்னை புதுவிதமாக காட்டவேண்டும்’ என்று இயக்குநர் கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார். 

படபிடிப்பின் போது லிப் லாக் முத்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியது உண்மை தான். அதற்கு காரணம் என்னுடைய மகன் தீரன். அவன் இப்போது சிறுவன், என்னை ரோல் மாடலாக பார்க்கிறான். நான் எதை செய்தாலும் அதை அவன் திரும்ப செய்கிறான். நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதை பார்த்து. அதே போல் பள்ளிக்கு சென்று செய்துவிட்டால் பிரச்னை நமக்கு தான். அதனால் இப்போது அதை போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். 

நிச்சயம் எதிர்காலத்தில் லிப் லாக் முத்த காட்சியில் நடிப்பேன். கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம்!” என்று வேண்டுகோள் வைத்தார் சிபிராஜ்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles