ஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு!

Tuesday, December 5, 2017

பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார். 

இப்படத்தின் வசனம் மற்றும் ஒருங்கிணைப்பை கவனிக்கும் கி.ஸி.ரி. ராஜராஜா கூறும்போது,                                                                                                                                                        

“உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும்  பின்னப் பட்டது தான். அப்படி குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் வரவேற்பு இருக்கும். தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதை.

நம் மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அவர்கள் நம்மை விட்டு போன பிறகு அவர்களை நினைத்து வருத்தப்படுவோம். அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் படத்தின் திரைக்கதை!” என்றார்.                        

தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே, தமிழில் “ அனிருத் “ என்ற பெயரில் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles