ஹாலிவுட்டுக்குள் நுழைந்த நெப்போலியன்!

Tuesday, December 5, 2017

கைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.

படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட சாம் லோகன் கலேகி இயக்குகிறார்.  படத்தில் ஜெஸ்ஸி டீன், ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

பெண்களை முன்னிலைபடுத்தும் படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஒரு க்ரைம், அமானுஷ்ய கூட்டணி நல்லதொரு வரவேற்பையும், கூடுதலான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெஸி ஜென்சென் ஒரு துடிப்பான காவல்துறை அதிகாரியாக (பில்லி ஜீன் ஃபின்னிக்) களம் காண்கிறார். 

படத்தில் ஜெஸி, அயல்நாட்டு இராணுவப்பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான லேக் ஓரியன் பகுதிக்கு திரும்புகிறார்.  அமைதியான அந்தப் பகுதியில் நடைபெறும் தொடர் கொலைகளும், விவரிக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் அவரை பெரிதும் பாதிக்கிறது. விசாரணையை துவக்குகிற அதிகாரி பின்னிக், தனது கேள்விகளுக்கான பதில்களை விட, அதிக கேள்விகளையே எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், தனது மரித்துப் போன நண்பருடைய சகோதரரை எல்லிஸ் சந்திக்க, காதல் மலர்கிறது.

விசாரணை வட்டம் விரிவடைந்துச் செல்ல செல்ல, இந்த அசாதாரண நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் நைன் ரூஜ் என்ற ஒரு அமானுஷ்ய சக்தி என்றும் இந்த நிகழ்வுகள் அதன் மறுபிறப்பைச் சுட்டிக்காட்டுவதாகவே உணர்கிறார் அதிகாரி ஃபின்னிக். காவல்துறை தலைவரும் சமூக தலைவர் பாஸ்டர் வில்ஹெம்மும்இந்த கோட்பாடினை உடனடியாக மறுக்கின்றனர். நைன் ரூஜ் முதன் முதலாக டெட்ராய்ட்டின் நிறுவனரான அண்டோயின் காடில்லாக் என்பவரை 1700 ஆம் ஆண்டில் பிரஞ்சு படைகள் இந்த நகரை நிர்மாணிக்க முயலும் போது தாக்கியதாக சொல்கிறார்கள்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்குப் பின், நைன் ரூஜ் மீண்டும் உயிர்த்தெழுந்து பழிவாங்க துடிக்கிறது. டெட்ராய்ட் நகரை அழிவிலிருந்து காப்பதற்கு  அதிகாரி ஃபின்னிக் அயராது உழைக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிர்பந்தம் ஏற்படுகிறது. பின்னர் முடிவு என்ன என்பதே படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை முடிச்சு ஆகும். 

“டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles