நயன்தாராவுக்கு கேரவன் கிடையாது - நடிகர் சிவகார்த்திகேயன் தடாலடி!

Monday, December 4, 2017

24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரிக்கும் படம் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடி நடிக்க, மோகன் ராஜா இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு, அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விழாவில், சிவகார்த்திகேயன் பேசும்போது, 

“தனி ஒருவன் படத்தை இரண்டு முறை பார்த்து, மோகன் ராஜா சாரிடம் போனில் அழைத்து படத்தை பற்றி சிலாகித்து பேசினேன். பிறகு, அவரோடு ஒரு படம் பண்ணனும்னு நானே அவரிடம் தயக்கத்தை விட்டு கேட்டேன். அப்படித்தான் இந்தப் படம் தயாரானது. ‘வேலைக்காரன்’ தலைவர் டைட்டில். அதை வைப்பதா? என முதலில் யோசித்தேன். ‘படத்துக்கு பொருத்தமான தலைப்பு’னு ராஜா சார் சொன்னதால் வைத்தோம். அதை படம் பார்த்தால் உணர்வீர்கள். 

படத்தின் தலைப்பை கவிதாலயாவிடம் இருந்து வாங்கி தன் படத்துக்கு வைத்திருந்தார் விஜய் வசந்த். இந்த படத்துக்கு கேட்டதும் பெருந்தன்மையோடு கொடுத்தார். ஃபகத் பாஸில் இந்த படத்தில் நடித்தது எங்களுக்கு கிடைத்த ஒரு அதிர்ஷ்டம். அவர் ஒரு சர்வதேச நடிகர். அவரின் நடிப்பை பக்கத்தில் இருந்து பார்த்து, ரசித்து, பயந்து நடித்ததால் தான் நானும் ஓரளவுக்கு நடிக்க முடிந்தது. 

‘ஏகன்’ பட ஷூட்டிங்கில் தான் முதன் முதலில் நயன்தாராவை நான் பார்த்தேன். அதன் பிறகு ‘எதிர்நீச்சல்’ படத்துக்கு சம்பளம் கூட வாங்காமல் நடித்து கொடுத்தார். அதன் பிறகு ‘வேலைக்காரன்’ ஷூட்டிங்கில் தான் அவரை சந்தித்தேன். அவரின் தன்னம்பிக்கை தான் அவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. இந்த படத்துக்கு கேரவன் கிடையாது, ஒன்றாக அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பேசுவோம். அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். 

அனிருத் இல்லைன்னா சிவகார்த்திகேயன் இல்லைனு ட்விட்டரில் பலரும் சொல்வார்கள். அது உண்மை, அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் எனக்கு நிறைய கொடுத்திருக்கிறார்கள். அதை எப்படி திருப்பி கொடுப்பேன்னு தெரியல. ரசிகர்களுக்கு நான் கொடுக்கும் பரிசு இந்த ‘வேலைக்காரன்’” என்றார். 

நடிகர்கள் ரோபோ ஷங்கர், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், மன்சூர் அலிகான், விஜய் வசந்த், கலை இயக்குனர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டு பேசினர்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles