பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் !

Wednesday, December 6, 2017

நடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு  காரணமாக  ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில்  சிகிச்சை பலனின்றி காலமானார்.

இவரது உடல் நாளை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது. நாளை மதியம் இறுதி சடங்கு நடைபெறும் .

கோலிவுட்டில் ‘நாளைய செய்தி’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘லக்கி மேன்’, ‘அசுரன்’, ‘மாமன் மகள்’, ‘சூப்பர் குடும்பம்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இவரது இயற்பெயர் டைடஸ். மனைவியின் பெயர் ஷோபியா. மகள்களான ஷரோன், பிராத்தனா உள்ளனர். இருவரும் திருமணமாகி ஹைதராபாத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles