மகளை நாயகியாக்கி அர்ஜுன் இயக்கும் ‘சொல்லிவிடவா’!

Wednesday, August 30, 2017

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், அர்ஜுன்  தயாரித்து, இயக்கும் படம் “சொல்லிவிடவா”. இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவை நாயகியாக்கி, முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன்குமார் நடித்துள்ளார். 

மேலும் சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் உடன் நடித்துள்ளனர். ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்வில் சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான கதையாம்!

சென்னை, தர்மஸ்தலா, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது, இப்படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படத்தை அர்ஜுன் உருவாக்கியுள்ளதால், இப்படமும் அவரது வெற்றிப் பட வரிசையில் சேரும் என்கிறது கோலிவுட் பட்சி!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles