அமீர் - சாந்தினி ஜோடியாக நடிக்கும் படம் "எம்.ஜி.ஆர். பாண்டியன்!

Tuesday, August 29, 2017

மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா தயாரித்து, இயக்கும் படம் ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’. இப்படத்தில் அமீர் நாயகனாகவும், சாந்தினி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், நடிகர்கள் ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் மகதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள். வைரமுத்து, பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்.

இப்படத்தை தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறும்போது,  

“தமிழ் சினிமாவில் ‘அமைதிப்படை’க்கு படத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும் ‘எம்.ஜி.ஆர். பாண்டியன். தற்போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை சிறப்பாக கொண்டாடிவரும் இவ்வேளையில், அவரின் ரசிகனாக இப்படத்தில் அமீர் நடித்துள்ளார். அவரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம. அமீர், ‘வட சென்னை’, ‘சந்தனத்தேவன்’ படங்களில் பிசியாக இருப்பதால், இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார். 

அண்மையில், கோலிவுட்டில் பிரபலங்களில் பெயரிலும், வசூல் வேட்டை நடத்திய ஸ்டார் படங்களின் பெயரைக் கொண்டும் படங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் எம்.ஜி.ஆர் என்று பெரும் ஆளுமையின் பெயரும், வெற்றி பெற்ற ரஜினியின் ‘பாண்டியன்’ படத்தின் தலைப்பையும் இணைத்து ‘எம்.ஜி.ஆர். பாண்டியன்’ என பெயர் சூட்டியுள்ளார் ஆதம்பாவா என்பது குறிப்பிடத்தக்கது. 

- கிராபியென் ப்ளாக்
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles