எனக்கு ரோல்மாடல் யாருமில்லை - லிஸி ஆண்டனி!

Monday, August 28, 2017

மிழ் சினிமாவில் அபூர்வமாகவே துணைக் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் எழுதப்படுகின்றன. அப்படி தன் திரைக்கதையில் உருவாகும் பாத்திரங்களுக்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பை அளிப்பவர் இயக்குநர் ராம். அண்மையில் அவரது இயக்கத்தில் வெளியான 'தரமணி' படத்திலும், அத்தகைய முத்திரையை பதித்துள்ளார். இப்படத்தில் மன அழுத்தமுள்ள மனைவி பாத்திரத்தில் லிஸி ஆண்டனி நடித்துள்ளார். அவரது நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.  
 

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து லிஸி ஆண்டனி பேசிய போது,

"எனக்கு சின்ன வயதிலிருந்தே நடனத்தில் ஆர்வம். கிளாசிக்கல்  கற்றிருக்கிறேன். இந்தியா வந்த போது எனக்கு நட்பான இயக்குநர் ராம் சார். முதலில் 'தங்க மீன்கள்' படத்தில் நடிக்க அழைத்தார். நட்பின் பேரில் தான் அதில் ஸ்டெல்லா மிஸ் பாத்திரத்தில் நடித்தேன். ஆனால் அது பெரிய அளவில் போய்ச்  சேர்ந்தது. இதுவரை, சிறு சிறு வேடங்களில் சுமார் 15 படங்கள் நடித்திருப்பேன். இப்போது ‘தரமணி’யில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. 

எனக்கு ராம் சார் படைப்புத் திறமை மீது பெருமிதம் உண்டு. படத்தில் முக்கியமாக ஆறு தம்பதிகள் வருகிறார்கள். எல்லாரையும் மறக்க முடியாதவர்களாக காட்டியுள்ளார். என் பாத்திரமும் அப்படித்தான். இதற்கு ஏழு நாட்கள் ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு சுமுகமாக இருந்தது. அவர் இயல்பாக நடிக்க வைப்பார். ஏன் அழுகிற காட்சிகளில் கூட கிளிசரின் தர மாட்டார். கேட்டால், ‘நினைத்து அழுகை வர வைக்கும்படி வாழ்க்கையில் சம்பவம் எதுவுமே இல்லையா? என்பார். நான் கிளிசரின் போடாமல் தான் அழுதேன். எனக்கு ரோல்மாடல் யாருமில்லை. என் நடிப்பை பார்த்துவிட்டு நிறைய பேர் பாராட்டி வருகின்றனர். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது!” என்றார். தற்போது 'பேரன்பு', 'சூ மந்திரக்காளி', ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட படங்களில் லிஸி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles