‘சிலாக்கி டும்மா’ நடன இயக்குநரை பாராட்டிய விஜய்!

Sunday, August 27, 2017

மிழ் சினிமாவில் ‘ஹலோ நான் பேய்’ பேசுறேன் படத்தில் நடன இயக்குநராக அறிமுகமானவர் சிவராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற “சிலாக்கி டும்மா” என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் அனைத்து பாடலுக்கும் நடனம் அமைத்தார். அண்மையில் ‘மீசைய முறுக்கு’ படத்திலும் அவர் பணியாற்றுள்ளார். 
 

தன்னுடைய சினிமா பிரவேசம் குறித்து மாஸ்டர் சிவ ராக் சங்கர் பேசும்போது,

“சினிமாவில் முதன் முதலில் எனக்கு நடன இயக்குநராக வாய்ப்பு தந்தவர் இயக்குநர் சுந்தர்.சி சார் தான். ‘முத்தின கத்திரிக்காய்’ படத்தில் அவரை நடனமாட வைத்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதைத் தொடர்ந்து எனக்கு ‘மீசைய முறுக்கு’ படத்தில் வாய்ப்பு அளித்தார். அவருக்கு இந்நேரத்தில் என்னுடைய நன்றியை சொல்லிக்கொள்கிறேன். 

‘மீசைய முறுக்கு’ படத்தில் "அடியே சக்கரக்கட்டி" , “மாட்டிக்கிச்சு", "கிரேட்  ஜி" போன்ற பாடல்கள் எனக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதை ரசிக்கிறார்கள் என்று அறியும்போது எனக்கு அது மேலும் ஊக்கத்தை தருகிறது. இப்படத்தில் வரும் "அடியே சக்கரக்கட்டி" பாடலுக்கு மட்டும் தான் நடனம் அமைக்க சென்றேன். 

என்னுடைய நடனம் பிடித்து போய் ஹிப்ஹாப் தமிழா ஆதி சார், என்னை அனைத்து பாடலுக்கும் நடனம் அமைக்கும்படி கூறினார். இதைத்தொடர்ந்து ‘ரம்மி’ இயக்குநர் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்துக்கும், இன்னும் சில படங்களுக்கும் நடனம் அமைத்து வருகிறேன். ‘சிலாக்கி டும்மா’ பாடலில் இடம்பெற்றுள்ள நடனம் ‘எனக்கும் என்னுடைய மகனுக்கும் மிகவும் பிடிக்கும்’ என்று  விஜய் சார், என்னுடைய உதவி நடன இயக்குநரை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தபோது கூறியுள்ளார். அது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு” என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles