ட்ரெய்லரைப் பார்த்தே, பட உரிமையை வாங்கிய விநியோகஸ்தர்!

Saturday, August 26, 2017

வி.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் ‘மதுரவீரன்’. நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் நாயகி  மீனாட்சி நடிக்கிறார்.

மேலும் சமுத்திரகனி,‘வேல’ராமமூர்த்தி, ‘மைம்’ கோபி, தேனப்பன், மாரிமுத்து, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து, உருவாகி வரும் இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் பி.ஜி. முத்தையா.
‘மதுரவீரன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து, வியந்து போய் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்ரீ சரவணபவா பிலிம்ஸ் ஏ.சீனிவாச குரு வாங்கியுள்ளார். படப்பிடிப்பு முடியும் முன்பே படம் வியாபாரமாகி உள்ளது கோலிவுட் உதவி இயக்குநர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles