ஜல்லிக்கட்டின் பெருமை பேசும் ‘வீரத் திருவிழா’!

Thursday, August 24, 2017

இறைவன் சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக நீ.செல்வகுமார் தயாரித்துள்ள படம் ‘வீரத்திருவிழா’. சத்யா என்பவர், இப்படம் மூலம் அறிமுகமாகிறார். மேலும், செல்வம், செல்வா, தேனிகா, பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார்  வைரமணி. 

இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, 

“முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டுவையே வாழ்க்கையாக கொண்ட மக்களின் கதையை மையமாக வைத்து, எடுக்கப் பட்ட படம் ‘வீரத்திருவிழா’. அந்தக் காலத்தில் ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு இல்லை; வீரத்தின் வெளிப்பாடு தான். ஜல்லிக்கட்டுக்காக ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டு, அதில் வென்று, ஊருக்கு எப்படி நல்ல பெயரை வாங்கித் தருகிறார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. இப்படத்தில் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இப்படமே, தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப் பட்ட முதல் படமாகும். முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாகவும் இது இருக்கும்!” என்றார். 

இப்படத்திற்காக காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல் ,நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். 

 - கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles