கோலிவுட்டின் முதல் சர்வதேச உளவு திரில்லர் 'விவேகம்'!

Thursday, August 24, 2017

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், உலகமெங்கும் இன்று வெளியாகிறது 'விவேகம்'. அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் சிவா. 

'விவேகம்' குறித்து இயக்குனர் சிவா பேசுகையில், 

“கிராமப்புற பின்னணியில் 'வீரம்', நகரத்தின் பின்னணியில்  'வேதாளம்' படத்திற்கு பிறகு, சர்வதேச படம் ஒன்று பண்ணலாம் என்ற யோசனையை அஜித் சார் தான் கொடுத்தார். அப்படியாக, தமிழ் சினிமாவின் முதல் சர்வதேச உளவு திரில்லர் படம் தான் 'விவேகம்'. 

இந்தக் கதையை நான்கு மாதங்களில் தயார் செய்தோம். 'விவேகம்' படத்தில் ஆக்ஷனுடன் சேர்ந்து சரியான கலவையில் எமோஷன்களும் உள்ளன. பல்கெரியா, சைபீரியா, க்ரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடத்தினோம். அஜித் சார் மாபெரும் மனிதர் என்பது மட்டுமில்லாமல், அசுர உழைப்பாளி. இப்படத்தில் மூன்று பெரிய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் அவரின் ரசிகர்களுக்கு  ஒரு படையலாக இருக்கும். சண்டை காட்சிகளுக்கு 'டூப்' வைப்பதை அவர் முற்றிலும் தவிர்பவர். இப்படத்தில் அவர் செய்த ஒரு அசுர பைக் ஸ்டாண்டை பார்த்த  அதனை இயக்கிய ஹாலிவுட் சண்டை இயக்குனர் காலோயன் வொடெனிசரோ அசந்து போய் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார், 

ஏனென்றால் அந்த ரோடு பனியிலும் மழை நீரிலும் ஊறி, வழுக்களாகவும் அபாயகரமாகவும் இருந்தது. இந்தப் படத்துக்காக அஜித் சார் ஜிம்முக்கு மாதக்கணக்கில் சென்று, கடும் உழைப்பு போட்டு தன் உடலை செதுக்கியுள்ளார். அவர் கடைபிடிக்கும் அவரது வாழ்க்கை தத்துவமான  'Never Say Die'  வை மையமாக வைத்தே இப்படத்தில்  'Never ever give up' என்ற வசனத்தை  எழுதினோம். உண்மையான உழைப்பு தரும் பெயரும் வெற்றியும் வேறு எதனாலும் தர முடியாது!” என்றார். 

இப்படத்தில் அக்ஷரா ஹாசன் நடித்துள்ளதால், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கும் அஜித்துக்கும் தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதனால், கமல் ரசிகர்களும் படத்துக்கு அமோக ஆதரவு அளிப்பார்கள் என காதை கடிக்கிறது கோலிவுட் பட்சி!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles