‘தரமணி’ படத்தில் நடித்தது மிகப் பெரிய அங்கீகாரம்! - நடிகர் அழகம் பெருமாள் 

Tuesday, August 22, 2017

மிழ் சினிமாவில் அழகம் பெருமாள் என்ற பெயர் கேட்டதும், பலரின் நினைவுக்கு வருவது அவர், இயக்குநர் மணிரத்னத்தின் சிஷ்ய பிள்ளை என்பதுதான். அவரும் தன்னுடைய குருநாதரை மறந்துவிடாமல், கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, சினிமாவில் இயங்கி வருகிறார். இடையில் மணியின் தயாரிப்பில் 'டும் டும் டும்' படத்தை இயக்கி, வெற்றியும் பெற்றார்.தொடர்ந்து நடிப்பில் தீவிரம் காட்டிவரும் அவருக்கு, அண்மையில் வெளியாகியுள்ள 'தரமணி ' படம் பெரும் வரவேற்பை, ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி  தந்துள்ளது. 

இந்தப் படத்தில் நடித்தது குறித்து அழகம் பெருமாள் பேசியபோது, 
 
“ரொம்ப நாளைக்கு பிறகு ‘தரமணி’ திரைப்படத்தில் நான் நடித்துள்ள பாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. “பரண்பாஸ் வாக்கு, பைபிள் வாய்க்கு லே” என்ற வசனம் இப்போது சமூக வலைதளங்களில் பிரபலம். இந்தப் படத்தை பொறுத்தவரை இயக்குநர் ராம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் நான்கு நடிகர்களை நடிக்க வைத்து கருத்து சொல்லுற மாதிரி நீளமான காட்சியாக வைக்கவில்லை. கதையின் போக்கில் நம்ம மனதை தொடுகிற மாதிரி சொல்லிட்டு போயிருக்கிறார். இது எனக்கும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

ராம் என்னிடம் கதை சொல்லும் போது, என்னுடைய காட்சிகள் இவ்வளவு ஸ்ட்ராங்காக வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சமூகத்துக்கு தேவையான கருத்து சொல்றேன் என்று எல்லாரும் உட்கார்ந்து ஒப்பாரி வச்சு, சென்டிமெண்டா திரும்ப திரும்ப நடந்து, முடிந்து போன விஷயங்களை பேசி, ஒண்ணும் நடக்கப்போவது கிடையாது. அதை யாரவது பிரேக் செய்ய வேண்டும் என்று விரும்பினேன் அதை ராம் செய்துவிட்டார். 

‘தரமணி’ படத்தில் இப்படி ஒரு முயற்சியை தான், படத்துக்குள் கொண்டுவர போகிறார்னு எனக்கு தெரியாது. என் கேரக்டர் இதுதான்னு சொன்னாரு. ஷூட்டிங் போனேன், நடிச்சி கொடுத்தேன். பிறகு படமா பார்க்கும் போது தான் தெரிகிறது. இயக்குநரின் வாய்ஸ் மிகப் பெரிய அளவில் படத்துக்கு உதவியிருக்கு. அது ஒரு ஆரோக்கியமான, வரவேற்க வேண்டிய விஷயமாகும். இந்தப் படத்தின் மூலம், எனக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் ராமுக்கு நன்றி!” என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles