‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்!

Tuesday, August 22, 2017

மிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் திரைப்படம் ‘சாஹூ’. ‘பாகுபலி 2’வின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, பிரபாஸ் நடிக்கும், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், படத்தின் நாயகியாக ஸ்ரத்தா கபூர் தேர்வாகி உள்ளார். நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

கலையை சாபு சிரிலும் ஒளிப்பதிவை மதியும் ஏற்றுக்கொண்டுள்ளனர், படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துக்கொள்கிறார். அமிதாப் பட்டாச்சார்யா பாடல்கள் எழுத, சங்கர் எஹ்ஸான் லாய் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்குகிறார் சுஜீத். ‘சாஹூ’ படத்தை யு.வி. கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்கின்றனர். 

இப்படம் குறித்து அவர்கள் கூறும்போது, “ஸ்ரத்தா கபூர் கதைக்கு மிகவும் பொருத்தமான தேர்வு. அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது பிரபாஸ் நடிக்கும் முதல் ஹிந்திப் படம். அதனால் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகளுக்கு குறைவிருக்காது” என்றனர். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles