அஜித் ரசிகர்களின் வரவேற்பால் மகிழ்ந்தேன்! நடிகர் விவேக் ஓபராய் பெருமிதம்!

Monday, August 21, 2017

குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள படம் விவேகம். இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா உள்ளிட்டோருடன் பாலிவுட் நட்சத்திரம் விவேக் ஓபராயும் நடித்துள்ளார். இப்படத்தின் நான் நடித்துள்ளது பற்றி அவர் பேசும்போது, 

“இயக்குநர் சிவா என்னை சந்தித்து, கதை சொன்னபோது 15 நிமிடங்கள் தான் கேட்டேன். பிறகு, “போதும், நான் நடிக்கிறேன்” என சொல்லி விட்டேன். மொத்த கதையையும் கேட்காமல் நான் எடுத்த முடிவு சரி தான் என்பதை ‘விவேகம்’ படம் நிரூபித்து விட்டது. தமிழ் மொழியில் பேசி நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அஜித் சிவா கூட்டணியில் வெளி வந்த ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோவுக்கும், இயக்குனருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி புரிந்தது.

படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன், அஜித்தின் நண்பனாக நடித்திருக்கிறேன். எல்லோரும் இது ஹாலிவுட் படம் போல இருப்பதாக சொல்கிறார்கள். அப்படியில்லை, ‘விவேகம்’ ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் தமிழ் படம். என் வசனங்களை தங்கிலீஷில் எழுதி, மனப்பாடம் செய்து பேசி தான் நடித்தேன். இந்தப் படத்தில் நான் டப்பிங் பேசவில்லை, பிரின்ஸ் என்பவர் குரல் பொருத்தமாக அமைந்ததால் எனக்கு அவர் தான் டப்பிங் பேசினார். 

அஜித் அண்ணாவை முதல் முறை பல்கேரியாவில் சந்தித்தேன். படப்பிடிப்பு குழுவினர் எல்லோரிடமும் இனிமையாக பழகுவார். அஸிஸ்டெண்ட் உட்பட அனைவருக்கும் எந்த ஈகோவும் இல்லாமல் டீ ஊற்றி கொடுப்பார். அஜித் அண்ணாவுடன் நடிப்பதை கேள்விப்பட்ட என் உறவினர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் மற்றும் என் ரசிகர்களால் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. 

மைனஸ் 17 டிகிரி குளிரில் பல்கேரியாவில் நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 4 கோட் போட்டுக் கொண்டு நடித்த எனக்கே குளிர் தாங்கவில்லை. வசனங்கள் பேச மிகவும் கஷ்டப்பட்டேன். அதிலும் அஜித் அண்ணா வெற்று உடம்போடு நடித்தார். காலை 5 மணிக்கு ஹோட்டலில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள். நான் எழுந்து போய் பார்த்தால் ஜிம்மில் அஜித் மட்டும் வொர்க் அவுட் செய்து கொண்டிருப்பார். எவ்வளவு அர்ப்பணிப்பு இருந்தால் இப்படி கடுமையான உழைப்பை கொடுக்க முடியும்” என்றார். ஆகஸ்டு 24 ஆம் தேதி ‘விவேகம்’ படம், உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles