ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படம் '12.12.1950'

Wednesday, August 16, 2017

தமிழ் சினிமா ரசிகர்களிடையே அண்மையில் வெளியான ‘12.12.1950’ படத்தின் போஸ்டர் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை இயக்கி, நடித்து வருபவர் கபாலி செல்வா. இவர், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நாற்பது ஆண்டு கால சாதனைகள் பற்றி ட்விட் செய்திருந்தார். இது பற்றி அவர் பேசும்போது, 

''ரஜினி சாரின் பிறப்பை, அவரது பிறந்த நாளன்று மட்டும் கொண்டாடாமல், தினந்தோறும் கொண்டாடும் ரசிகர்கள் நாங்கள். ரஜினி சாரின் 40 ஆண்டு கால சாதனை 'வாயேஜர்' விண்கலம் செய்துள்ள சாதனையை விட மிகப் பெரியது. தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவிலேயே எண்ணற்ற தடைகளையும் சோதனைகளையும் கடந்து வெற்றி பெற்றவர் ரஜினி சார். அவரது சாதனைகள் பற்றி 'வாயேஜர்' விண்கலத்தின் 40 ஆம் ஆண்டை கொண்டாடும்  'நாசா' விண்வெளி மையத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பற்றி, அடுத்த மாதம் ரிலீசாக போகும், எனது படம் '12.12.1950'. இதனை உலகத்தில் உள்ள எல்லா ரஜினி ரசிகர்களுக்கும் சமர்ப்பணம் செய்கிறேன்.'' என்றார். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles