கௌதம் வாசுதேவ் மேனின் வர்ணனை   கோலிசோடா 2 டீசரை தூக்கி நிறுத்தும் - இயக்குநர் விஜய் மில்டன்

Wednesday, August 16, 2017

தமிழ் சினிமாவில் சமூகப் பிரச்னையை மையமாக எடுத்துக்கொண்டு, படங்களை இயக்கி, வெற்றி பெற்றவர் விஜய் மில்டன். அண்மையில், அவரிடம் இருந்த வெளியான ‘கடுகு’ படமும் அவ்வகையில் பல தரப்பினராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்நிலையில், அவர் தனது ‘கோலிசோடா 2’ படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த டீசரின் பின்னணி வர்ணனைக்கு இயக்குநர் கௌதம்வாசுதேவ் மேனனை அணுகியுள்ளார். அவரும் உடனே ஓ.கே. சொல்லியதோடு, மிகச் சிறப்பாக வர்ணனை செய்துள்ளாராம். இதுகுறித்து இயக்குநர் விஜய் மில்டன் பேசும்போது, 

“மிக அருமையாக வந்திருக்கும் 'கோலி சோடா 2'' வின் டீசருக்கு ஒரு அழுத்தமான பின்னணி வர்ணனை தேவைப்பட்டது. இயக்குநர் கௌதம்வாசுதேவ் மேனனின் குரலும் அதன் தனித்தன்மையும் எனக்கு எப்பொழுதுமே பிடிக்கும். எனக்கும் எனது படங்களுக்கும் என்றுமே பக்கபலமாக இருக்கும் இயக்குநர் லிங்குசாமி மூலம் கௌதம் அவர்களை அணுகி, இந்தப் பின்னணி வர்ணனை பற்றி கூ , செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டோம். எங்கள் கோரிக்கையை உடனே ஒப்புக்கொண்ட அவர், எதிர்பார்த்ததை விட மிக பிரமாதமாக பின்னணி வர்ணனை செய்து கொடுத்தார். இந்த டீசரை ரசிகர்கள் நிச்சயம் விரும்புவார்கள் என நம்புகிறேன். இது போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்குநர்கள், எங்கள் படங்களுக்கு கொடுக்கும் பெரிய ஆதரவிற்கு  நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன்” என்றார். 

எந்த ஈகோவும் இல்லாமல், இப்போதெல்லாம் ஒரு இயக்குநரின் படங்களின் மற்றொரு இயக்குநர் பணியாற்றுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலை தொடர வேண்டும் என்பது கோலிவுட் ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles